சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் ஓடையின் நடுவே சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கட்டிடம் கட்டி வரும் பணி தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான மந்தை பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு துணை போகும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேராட்டதிற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தை கைவிட மறுத்ததால் 10க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டவர்களை புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.