புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

63பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் போலீசார் நேதாஜி ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை நடத்தியபோது அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கடைக்காரரான ஈரோடு வானியபிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (54) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் ஈரோடு சத்திரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம், அரக்கோட்டையை சேர்ந்த பாரதி (33) என்பவரை ஈரோடு வடக்கு போலீசார் கைது செய்தனர்.

மேலும், சிறுவலூர் போலீசார் நடத்திய சோதனையில் கெட்டிசெவியூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான கெட்டிசெவியூர், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த கலா (49) என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.