தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் ஆட்சியரிடம் மனு

59பார்த்தது
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் மூலப் பொருள்களின் விலை. சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை அபரீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக திட்டமிட்டபடி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டால் 30 சதவீதத்திற்கு மேல் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக ,
தனி நபர்கள் முதல் அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து அரசு மற்றும் அதிகாரியிடத்தில் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இதனால் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு பணி பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களது கோரிக்கைகள் ஏற்கபடாவிட்டால் கோவை திருப்பூர் ஈரோடு கிருஷ்ணகிரி ஓசூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சார்பில் வரும் 29ஆம் தேதி அன்று சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் சங்கத்தின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி