சென்னையில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, “கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் கூறிய பின்பும் அவர் மீது விசாரணை நடத்தாதது மர்மமாகவே இருக்கிறது என்றும், ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை குறித்து விசாரித்து முடிவு எடுப்போம் என்று கூறிய முதலமைச்சர் 4 வருடமாக அமைதி காத்து வருவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.