காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த ஏகனாபுரம் கிராம துணைத் தலைவி திவ்யா (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த திட்டத்திற்கு எதிராக இவர் 9 முறை தீர்மானம் நிறைவேற்றி களத்தில் போராடி வந்தார். இதனிடையே (நவ., 18) திவ்யா திடீரென தற்கொலை செய்தார். இவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.