மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகளில் சிறந்த புரதங்கள், ஆன்டி-ஆக்சிடென்ட், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உட்புறத்திலிருந்து வழங்குகிறது. மேலும் மக்கானா சாப்பிடுவதால், சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் கொலாஜன் என்கிற புரத வகை உடலில் சேர்கிறது. எனவே சரும சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தை எதிர்த்து போராடவும் இந்த ஸ்நாக்ஸ் உதவுகிறது. இதை நெய் விட்டு நன்கு வறுத்து சாப்பிட வேண்டும்.