நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவுக்கு அவரின் தந்தை சிவக்குமார் வைத்த பெயர் சரவணன். ஆனால் சூர்யா நடிகரான சமயத்தில் சித்தப்பு சரவணன் பிரபலமாக இருந்தார். சரவணன் என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு பிரபலமான நடிகர் இருப்பதால் அவரின் பெயரே உங்களுக்கும் வேண்டாம் என்று சொல்லி இனிமேல் நீங்கள் சரவணன் இல்லை சூர்யா என்று புதுப் பெயர் கொடுத்தவர் நேருக்கு நேர் படத்தை தயாரித்த இயக்குனர் மணிரத்னம்.