திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்து

70பார்த்தது
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்து
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் என மொத்தம் 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாக உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்ற திருச்சி, கரூர் தொகுதிகள் இந்த முறை அக்கட்சிக்கு ஒதுக்கப்படாது என்று கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட கன்னியாகுமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 7 தொகுதிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி