இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

65பார்த்தது
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் கணேசன் வயது 48. இவர் கிழக்கு தோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து அம்மையநாயக்கனூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி