தேர்தலை புறக்கணிப்பதாக வைத்த பேனரால் பரபரப்பு

5348பார்த்தது
தேர்தலை புறக்கணிப்பதாக வைத்த பேனரால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, அய்யலூர் பேரூராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட மலை கிராமமான இச்சித்துப்பட்டியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இச்சித்துப்பட்டி கிராமத்திற்குச் செல்ல பஞ்சந்தாங்கி சாலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் கரடு முரடான மண் சாலையில் செல்ல வேண்டும். மேலும், கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லாததால், ஆற்று ஓடையில் வரும் ஊற்றுநீரை பிடித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஊர் மக்கள் பெரிதும் சிரமமடைந்து வந்தனர்.

இது குறித்து ஊர் மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஊர் மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஊரின் நுழைவுவாயில் பகுதியில் பேனர் வைத்து கருப்பு கொடி கட்டியுள்ளனர்.

அதில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சாலை வசதியும், குடிநீர் வசதியும் இல்லை. அதனால் நாங்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை புறக்கணிப்போம் என்று மலைக்கிராம மக்கள் பேனர் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you