திண்டுக்கல்: கணவரை சேர்த்து வைக்கக் கோரி பெண் கண்ணீர் மனு

1067பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் கணவரை சேர்த்து வைக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மதியம் 1: 30 மணி அளவில் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது திண்டுக்கல் எரியோடு அருகே மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரூபாலா. இவருக்கும் விஜயபாண்டி என்பவருக்கும் திருமணம் ஆகி 14 வருடம் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தனது கணவர் சில்லறையில் மதுபானம் கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், தன்னையும் தன் குழந்தையையும் அடித்து துன்புறுத்தி வருவதாகவும் மேலும் இரண்டாவது மனைவியாக உமா என்பவரை வைத்துக்கொண்டு தன்னையும் தன் தாயாரையும் அடித்ததில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எரியோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் மகளிர் காவல் நிலையத்தில் விஜயபாண்டி விசாரணைக்கு ஆஜராகி விட்டு இது எனது குடும்ப பிரச்சினை நான் கோர்ட் மூலம் தீர்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு தன்னையும் தனது மகளையும் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தனது கணவரை அழைத்து விசாரணை செய்து தன்னுடன் வாழ வைக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி