அரசு பெண்கள் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்று அங்குள்ள மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர்

மாணவிகள் பள்ளிக்கு வரும்போது உங்களுக்கு எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் ஆசிரியர்களிடம் கேளுங்கள் சந்தேகம் கேட்பதில் வெட்கப்படாதீர்கள், சந்தேகம் கேட்பதில் கூச்சப்படாதீர்கள், சந்தேகம் கேட்பதில் பயப்படாதீர்கள் நம்மளை பார்த்து சிரிச்சிடுவார்களோ கிண்டல் செய்து விடுவார்களோ ஆசிரியரே நம்மளை திட்டிடுவாரோ என்ற எண்ணத்தை தயவு செய்து தூக்கி எறியுங்கள்.

ஏனென்றால் சந்தேகம் வரும்போது நீங்கள் கேட்கவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது இந்த குணம் உங்களை தொற்றிக் கொண்டே வரும்.

உங்களுடைய ஆசிரியர்கள் உங்களை திட்டுகிறார்கள் அறிவுரை சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம் நம்மளுடைய ஆசிரியர்கள் நம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.

நீங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு உயர்கல்விக்கு செல்லும் போது நல்லது கெட்டது சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

ஆசிரியர்கள் சொல்லுவதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எதை செய்ய வேண்டும் என்று பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you