அரசின் நலத்திட்டங்களை பெறும் சிறப்பு முகாம்

53பார்த்தது
பாலசமுத்திரத்தில் அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில்
பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பளியர் இன மக்கள், அரசின் நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில், பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக பழனி வட்டம், பாலசமுத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: -

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அனைத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பளியர் இன மக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து துணை ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் கேட்டறிந்து, பளியர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் 24. 05. 2024-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும்(25. 06. 2024) சிறப்பு முகாம்கள் அந்தந்த கிராமங்களில் சம்பந்தப்பட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி