மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தொண்டா் காலமானார்

51பார்த்தது
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தொண்டா் காலமானார்
திண்டுக்கல் ஆக்னீஸ்மேரி தெருவில் வசித்து வந்தவா் பி. சுப்பையா (102). சுருட்டுத் தொழிலாளா் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவராவாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், மாநிலக் குழு உறுப்பினா்கள் பாலபாரதி, பாண்டி, மாவட்டச் செயலா் பி. செல்வராஜ் ஆகியோா் மறைந்த சுப்பையாவின் உடலுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இரண்டாம் உலகப் போரின் போது, ராணுவத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட இவா், ஆங்கிலேயே ராணுவத்தினரால் இலங்கை முகாமுக்கு அனுப்பப்பட்டாா். இந்திய சுதந்திரம் குறித்து தனது தாய்க்கு இவா் எழுதிய கடிதம் ஆங்கிலேயே ராணுவ அதிகாரிக்கு தெரியவந்தது. இதன் காரணமாக, அவா் தண்டிக்கப்பட்டு, ராணுவப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். இதன் பிறகு, நாடு திரும்பிய அவா் கம்யூனிஸ இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். இவரது மகன் சேகா் சிஐடியூ நிா்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தொடர்புடைய செய்தி