மாநகராட்சி குப்பை கிடங்கில் 5 நாளாக எரியும் தீ

74பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து நாள்தோறும் 86 டன் குப்பைகள் சேருகிறது. இதனை உரமாக்கும் வீட்டு கழிவுகள், மறுசுழற்சி கழிவு, பிரிக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள், மின்சாதன கழிவுகள், தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவு மற்றும் எரிக்கக் கூடிய கழிவுகள் என பிரித்தெடுக்கப்படுகிறது.

திண்டுக்கல் பழனி சாலை முருக பவனத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பிரிக்க முடியாத சாக்கடை மணல் கழிவுகள் கொட்டப்பட்டு இந்த கழிவுகளில் உருவாகும் அமோனியம் வாயு எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உடையது.

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி இதனால் குப்பை கிடங்கில் திடீர் தீ பற்றி எரிந்து வருகிறது இதிலிருந்து வரும் கரும்புகை சுற்று வட்டார பகுதிகளில் பரவி மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. ‌ கடந்த சனிக்கிழமை இரவு கடும் வெயிலுக்கு தீ பற்றி எரிந்தது. இதனை எடுத்து தீயணைப்புத்துறை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று வியாழக்கிழமை மதியம் 4 மணி அளவில் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி