திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 23 வார்டு பகுதியில் திமுக வாக்கு சேகரிப்பதற்காக பழனி நகர் மன்ற தலைவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை பற்றி கேட்டனர். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல் அவரது மகள் ஒருவரை தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.