திண்டுக்கல்: குப்பைகளை அள்ளி கொட்ட சொன்ன ஆசிரியர்

79பார்த்தது
திண்டுக்கல் அருகே குட்டியபட்டி பகுதியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 15 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன இந்நிலையில் இன்று காலை பள்ளியில் உள்ள குப்பைகளை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பிளாஸ்டிக் வாலியில் பள்ளி சீருடை அணிந்து தூக்க முடியாமல் இருவர் தூக்கிச் சென்று அருகே உள்ள குப்பையில் கொட்டி உள்ளனர் அவர்களிடம் கேட்ட பொழுது தாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்

இதுகுறித்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்ட பொழுது பள்ளி மாணவர்கள் அவ்வாறு செய்யவில்லை பள்ளியிலேயே ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது தற்போது 15 மாணவர்கள் தான் உள்ளனர். இதையெல்லாம் கேட்காமல் குப்பை கொட்டுவதை வந்து கேட்கிறீர்கள் பள்ளி முழுவதும் சுத்தம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் கேட்கிறாங்க அதை யார் கொடுக்க முடியும் நீங்கள் தருவீங்களா பாத்ரூம் சுற்றுச்சுவர் மற்றும் பள்ளி கட்டிடம் அனைத்தும் சேதமடைந்துள்ளது அதை சரி செய்து தருவீர்களா என முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார் மேலும் அவர் கூறும் பொழுது பொன்மாந்தரை புதுப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பள்ளியை சுத்தம் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை சேர்த்து வைத்துள்ளோம் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி