ஒட்டன்சத்திரம்: சந்தையில் கலை கட்டிய புளி விற்பனை

54பார்த்தது
திண்டுக்கல்லில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் புளி விளைச்சல் களைகட்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வேம்பார்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, அஞ்சு குளிப்பட்டி உட்பட ஒட்டன்சத்திரம் பழனி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புளி விளைச்சல் உள்ளது. இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டு புளி வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் நாகல் நகரில் வருடம் தோறும் புளி சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொட்டை எடுக்காத புளி 1கிலோ 50 ரூபாய்க்கும், கொட்டை எடுத்த 1புளி ரூ. 80 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது போதிய விளைச்சல் இல்லாததாலும், வரத்து குறைவாக இருப்பதாலும், அதன் விலையும் உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சந்தையில் பழனி ஒட்டன்சத்திரம் பாச்சலூர் நத்தம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலி விற்பனை செய்யப்பட்டது அதன்படி கொட்டை எடுக்காத புளி ரூ. 70க்கும், கொட்டை எடுத்த புளி ரூ. 150க்கும் விற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் புளி விளைச்சல் குறைந்து உள்ளது. மேலும் புளியில் நோய் தாக்கப்பட்டுள்ளதால் வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் விலை உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ. 80 முதல் 120 ரூபாய்க்கு விற்ற புளி இந்த ஆண்டு 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 10 கிலோ ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனையாக கூறுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி