ஒட்டன்சத்திரம்: மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைப்பு

60பார்த்தது
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப்பாதையில் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுவேதா, வனத்துறை அலுவலர்கள், கிருபா பவுண்டேசன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :