திருச்சி சிவா தேர்தல் பிரசாரம்

1572பார்த்தது
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து திருச்சி சிவா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரை ஈடுபட்டார். அதில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி பேசியதாவது: பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்து போனார்கள்.

பின்னர் நிர்பந்தத்தினால் ஒன்றிய அரசு அதனை திரும்ப பெற்றது. அவைகள் விவசாயிகளை பாதுகாக்க அல்ல. முதலாளிகளை பாதுகாக்க. மோடி பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 108 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் கிடைத்த பணம் ஏழரை லட்சம் கோடி ரூபாய். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்த ஒரே இயக்கம் திமுக. இந்த முறை ஒன்றியத்தில் இருந்து பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.