பெரிய பள்ளிவாசல் ஈது மைதானத்தில் சிறப்பு தொழுகை

69பார்த்தது
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஈது மைதானத்தில் சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பெரிய பள்ளிவாசல் ஈது மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஈது மைதானத்தில் பேகம்பூர் சுற்றியுள்ள நத்தர்ஷா தெரு, ஜமால் தெரு, பள்ளிவாசல் தெரு, பூச்சி நாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பேகம்பூர் பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது ரபிக் சிறப்பு தொழுகையை நடத்தினார். தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒவ்வொருவராக கட்டித் தழுவி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி