மணிக்கூண்டில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம்

83பார்த்தது
மணிக்கூண்டில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நேற்று இரவு கூட்டணிக்கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம். எல். ஏ. பாலபாரதி, இ. பெ. செந்தில்குமார் எம். எல். ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: தமிழக மக்களைத் தான் மற்ற மாநில மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பா. ஜ. க, தோற்கடிக்கப் பட்டதுபோல் இந்த முறையும் மீண்டும் முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான உழைக்கும் வர்க்கத்தினர் உள்ளனர். தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்.

தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை ஆகிய அமைப்புகள் எதிர்க்கட்சிகளை வேட்டையாடப் பயன்படுத்தக்கூடிய கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவில் இதுவரை பார்க்காத கொடூரமாக 150 எம். பி. , க்கள் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நீதித்துறையை திட்டமிட்டு சீர்குலைக்கும் வேலையை பா. ஜ. க. அரசு செய்கிறது. தேசம் பாதுகாக்கப்பட ஒரே வழி இந்த தேர்தலில் பாஜகவும், அதன் அணியும் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி பல கதைகளை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி