கொடைக்கானல்: போலி மருத்துவர் ஊசி போட்டதால் 24வயது பெண் மரணம்

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள மேல்மலை கிராமங்களில் ஒன்றான கவுஞ்சி கிராமத்தில் விவசாயம் செய்து வசித்து வருபவர் விக்னேஷ் வயது 35, மனைவி பிரியதர்ஷினி வயது 24, இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது

இரண்டாவது குழந்தை கடந்த ஆறாம் தேதி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது

அப்பகுதி மக்களுக்கு தலைவலி, காய்ச்சல் வயிற்று வலி போன்ற சிறிய வியாதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் எனக் கிராம மக்களிடையே கூறப்படுகிறது.

அப்பொழுது பிரின்ஸ் என்பவர் வலியல் துடிக்கும் பிரியதர்ஷினிக்கு தவறுதலான மருந்து ஊசியின் மூலம் போடப்பட்டதாக கூறப்படுகிறது


ஊசி போட்ட சிறிது நேரத்தில் பிரியதர்ஷினிக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது உடனடியாக மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பிரியதர்ஷினியை பரிசோதனை செய்து பார்த்தபொழுது ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி