திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் வத்தலகுண்டு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஜாஸ்மின்கமலா வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, பல்வேறு ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 8-வாகனங்களை பறிமுதல் செய்து மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தாா். மேலும் தடை செய்யப்பட்ட ஓா் ஹாரன் பொருத்தப்பட்ட வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது.