வரசித்தி வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி யாக பூஜை

65பார்த்தது
வரசித்தி வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி யாக பூஜை
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை பஞ்சமி யாகபூஜை வாராகி அறக்கட்டளையின் தலைவர் சஞ்சீவிகுமார் சாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதில் வாராகிஅம்மன் தேய்பிறை பஞ்சமி யாகபூஜை வேள்வியில் வாராகி அம்மன் குதிரை வாகனத்தில் அஷ்வாரூடா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திண்டுக்கல், கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம், செந்துறை, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்பூஜைக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி அம்மன் பக்தர்களும், கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் வாராகி அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி