ப்ளம்ஸ் விளை இருந்தும் விளைச்சல் இல்லை விவசாயிகள் ஏமாற்றம்

54பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வில்பட்டி, ஆட்டுவம்பட்டி, தாண்டிக்குடி பெருமாள் மலை, பள்ளங்கி போன்ற கிராமங்களில் வருடம் தோறும் ஆரஞ்சு , அவகோடா, பிளம்ஸ், பிச்சிஸ், பேரி, மரதக்களி போன்ற பழ வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றனர்.


இதில் வருடம் தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ப்ளம்ஸ் அமோக விளைச்சல் இருக்கும்.

மே மாதம் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளம்ஸ் பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள் இதனால் கடந்த ஆண்டு 10000 கிலோக்கு மேல் விளைச்சல் இருந்து வந்தது அப்போது கிலோ ஒன்றுக்கு ருபாய் 90 முதல் 150வரை விலை போனது.

ப்ளம்ஸ் விளைச்சல் இருந்தும் தகுந்த விலை இல்லை என விவசாயிகள் குறை கூறுகின்றனர், இந்த ஆண்டு தொடர்ந்து மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் மிக குறைவாக உள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ப்ளம்ஸ் விலை ருபாய் 200 முதல் 300வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கேரளா, பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் விளை இருந்தும் விவசாயம் இல்லை என விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி