உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம்

66பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் “விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் விடுதியில் தங்கி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு “விழுதுகளை வேர்களாக்க“ என்ற தலைப்பின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி உத்தரவின்படி, நடைபெற்ற இந்த முகாமில் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனைகள் உயர்கல்வி மற்றும் நேர்மறை ஆற்றல் ஆகியவை குறித்து மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் NURTURE என்ற தன்னார்வ இயக்கத்தின் மூலமாக வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, மதி, உத்வேக பேச்சாளர் கிறிஸ்டோபர் மைக்கேல் ராஜ் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இம்முகாமில் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 190 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :