விஜய் காலில் கள்ளக்குறிச்சி பெண்ணை விழச் சொன்னார்களா?

83பார்த்தது
கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து தற்போது வரை 50 பேர் ஊயிரிழந்துள்ள நிலையில், நேற்று த.வெ.க தலைவர் விஜய் சேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பெண் ஒருவர் விஜய் காலில் விழுந்து கதறினார். இந்நிலையில் வைரலாகி வரும் வீடியோவில் நிர்வாகி ஒருவர் விஜய் காலில் விழும்படி பெண்ணிக்கிடம் கூறியதாக கூறப்பட்டுவருகிறது. ஆனால் அதற்கு விஜய் ரசிகர்கள் அப்படி இல்லை, விஜய் வருகிறார் என்று கூட சொல்லியிருக்கலாம் என கூறி வருகின்றனர்.