தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தர்மபுரி நகர போக்குவரத்து காவல்துறையினர் தர்மபுரி நகர பகுதிகளான 4 ரோடு, நெசவாளர் காலனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடு பட்டனர். அப்போது மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய தாக 15 பேர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.