தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி
மோளையானூர் கிராமத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்க தேக்கத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக பொதுப்பணி நீர்வள ஆதாரத் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே திறந்து விடப்படும் இந்த தண்ணீர் பயணம் செய்யும் வழியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கை
யுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.