தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி முதல் கொண்டகர அள்ளி ஊராட்சி காளிகரம்பு மிட்டாரெட்டிஅள்ளி வழியாக தர்மபுரிக்கு செல்ல சாலை அமைக்க வேண்டி தொடர்ந்து பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் சூழலில் சாலை அமைக்க உள்ள இடத்தை வனப்பகுதியில் தர்மபுரியில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தி. மு. க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன், மாநில வர்த்தகர் அணிதுணை செயலாளர் மெடிக்கல் சத்யமூர்த்தி, பாப்பிரெட்டிப் பட்டி ஒன்றிய செயலாளர் சரவணன், பொ. மல்லாபுரம் நகர செயலாளர் கவுதமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.