தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜிட்டாண்டஹள்ளி ஊராட்சி மதகேரியை அடுத்த போடாங்கல் மலை அடியோரம் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, செப்டம்பர் -10 இன்று பிற்பகல் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்களின் தலைமையில் அரசு துறைரீதியான அலுவலகர்கள் கலந்துக்கொண்டு குறைகளை கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, வீட்டு மனை பட்டா, மின் இணைப்பு, குடும்ப அட்டைகள், மகளிர் சங்க குழுக்கள் அமைத்து தொழில் பயிற்சி அமைத்தல் போன்ற கோரிக்கைகளை நேரில் வந்து நிறைவேற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் MVT. கோபால் MA. , BL. , ஊராட்சி மன்ற தலைவர் SMT. தமிழ்ச்செல்வி சரவணன், PTA தலைவர் MK. முனிராஜ் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் MVT. யுவராஜ் வார்டு உறுப்பினர் முனிராஜ் மற்றும் அரசு அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.