தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அங்கன்வாடி மையத்தில் நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் முன்னிலையில் வழங்கினார். பின் ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே மகத்தான உணவாக, திட உணவு வேறு ஏதுமின்றி வழங்கப்படுவதால் தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் சிறந்த முறையில் தாய்ப்பால் புகட்டி ஊட்டச்சத்து குறை பாடில்லாத குழந்தைகளை உருவாக்கிட, பச்சிளம் குழந்தைகள் மீதான தனித்துவமான அக்கறையின் அடிப்படையில் முதல்வரால் இத்திட்டம் முதற்கட்டமாக 2022ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு தருவதால், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். ஊட்டச்சத்து
உணவினை முறையாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். என ஆட்சித்தலைவர் கி. சாந்தி தெரிவித்தார்.