தர்மபுரி: வீடு புகுந்து ஒப்பந்ததாரர் மீது சரமாரி தாக்குதல்

68பார்த்தது
தர்மபுரி: வீடு புகுந்து ஒப்பந்ததாரர் மீது சரமாரி தாக்குதல்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி பழைய தர்மபுரி பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்ஜெயன் அரசு ஒப்பந்ததாரரான இவர், வரி செலுத்துவதற்கு ஒருவரிடம் தன்னுடைய நிலப்பத்திரத்தை கொடுத்து வைத்திருந்தார்.

இது தொடர்பாக அவருடன் இன்று (அக்.,30) காலை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் 5 பேர் கொண்ட கும்பல் தனஞ்செயன் வீடு புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில், தர்மபுரி நகர காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி