இயக்குனர் கொரட்டலா சிவா - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவான "தேவரா" படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று நல்ல வசூலை செய்துள்ளது.