ஒரு பிரஷர் குக்கரில் சீவிய பரங்கிக்காயை சேர்த்து, மூழ்கும் அளவு பால் சேர்த்து 4-5 விசில் வைக்கவும். காய் நன்றாக வெந்தவுடன் இதை நன்கு மசித்துக் கொள்ளவும். இதை ஒரு வாணலிக்கு மாற்றி அதனுடன் 3 ஸ்பூன் ராகி அல்லது அரிசி மாவு, முக்கால் கப் வெல்லம், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக வெந்து வந்தவுடன் கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து, சாப்பிட்டால் சுவையான பாயாசம் ரெடி.