விருத்தாசலம்: குழந்தையுடன் இளம்பெண் மாயம்

5512பார்த்தது
விருத்தாசலம்: குழந்தையுடன் இளம்பெண் மாயம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் வைதேகி. இவருக்கும் மங்கலம்பேட்டை அடுத்த கோ. பவழங்குடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 8 வயதில் ரித்திக் ராஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையை கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி தனது மகனுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற வைதேகி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வைதேகியின் தந்தை தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி