கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில்வே நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயிலடியில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக சில கடைகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் கடை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் செல்ல வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.