கடலூர்: அமைச்சரிடம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வழங்குதல்

72பார்த்தது
கடலூர்: அமைச்சரிடம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வழங்குதல்
பாட்டாளி மக்கள் கட்சி 18-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிவுறுத்தலின்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ. ஆலயமணி, செயலாளர் இல. வேலுசாமி இன்று காலை வழங்கினர். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி