கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி , விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில், தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தனர். இதில் குறிப்பாக ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.