அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட கழக கலந்தாய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களிடம் உரிமை சீட்டு சேர்த்ததை உறுதி செய்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக வாரியாக நடைபெறும் என்பதை தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.