சிதம்பரம்: கஞ்சா விற்றவர் கைது

76பார்த்தது
சிதம்பரம்: கஞ்சா விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமை யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலைக்கட்டி தெருவில் உள்ள நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 200 கிராம் கஞ்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் கீழமூங்கிலடி கிராமத்தை சேர்ந்த ரஜினி மகன் அரவிந்த் என்பதும், கஞ்சாபதுக்கிவைத்துவிற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி