வானமாதேவி: வாலிபர் மீது வழக்கு பதிவு

1515பார்த்தது
வானமாதேவி: வாலிபர் மீது வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிராமத்தை சேர்ந்த காசிநாதன் தொழிலாளி இவரது மகன் பிரகாஷ். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாலு மகன் சிவக்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரகாஷ் சிவக்கு மாரை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் காசிநாதனின் கூரை வீட்டுக்கு தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. இது குறித்து காசிநாதன் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது சோழத்தரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி