அயோத்தி விமான நிலைய பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப்

55பார்த்தது
அயோத்தி விமான நிலைய பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப்
உத்திரபிரதேசத்தில் அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி அயோத்தியில் பிரதமர் மோடியால், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அயோத்தி விமான நிலையத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்குவதற்கான அனுமதியை, துணை தளபதி அந்தஸ்திலான அதிகாரி ஒருவரின் கீழ் 150-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) அடங்கிய ஆயுதமேந்திய குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி