CO2விலிருந்து CO ஆக மாற்றம்

294பார்த்தது
CO2விலிருந்து CO ஆக மாற்றம்
புதைபடிவ எரிபொருள் சார்ந்த மின் நிலைய உமிழ்வில் வெளியாகும் கரியமில வாயு அளவைக் கணிசமாகக் குறைக்கக் கூடிய ஒரு அறை-வெப்பநிலை முறையை ஆராய்ச்சியாளர்கள் செயல்விளக்கிக் காட்டியுள்ளனர். இந்த எதிர்வினையில், திடமான கார்பன் அணுக்கள் கார்பன் டை ஆக்சைடு வாயுவில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுள் ஒன்றில் இணைந்து, அதனை கார்பன் மோனாக்சைடாக மாற்றுகிறது. இந்தப் பரிமாற்றத்திற்கு பொதுவாக அதிக வெப்ப வடிவிலான - குறைந்தபட்சம் 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை- கணிசமான அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே வெப்பத்திற்குப் பதிலாக, தனிப்பட்ட அலுமினிய நுண் துகள்களில் உலாவக் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட மேற்பரப்பு பிளாஸ்மோன்கள் (LSPs) எனப்படும் எலக்ட்ரான்களின் அலைவு அலைகளிலிருந்து பெறப்பட்ட ஆற்றலை அக்குழு எடுத்துக் கொண்டு இந்தச் செயல்முறையை மேற்கொண்டது.

தொடர்புடைய செய்தி