மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் - தமிழிசை

113354பார்த்தது
மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் - தமிழிசை
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான், நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என்று அவர் தெரிவித்தார். தமிழிசை சவுந்திரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலங்கானா மாநில ஆளுநராகவும் செயல்பட்டு வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென் சென்னை அல்லது நெல்லையில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி