உல்லாச வீடியோவை காட்டி பெண்ணுக்கு மிரட்டல்

3998பார்த்தது
உல்லாச வீடியோவை காட்டி பெண்ணுக்கு மிரட்டல்
தூத்துக்குடியை சேர்ந்தவர் 41 வயது பெண். இவர் கோவை தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பவருடன் கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

அதனை விக்னேஷ் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காண்பித்து விக்னேஷ், அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அந்த பெண், தனது உறவினர்களை அழைத்து கொண்டு கோவை ராம் நகரில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது உறவினர்கள் விக்னேசை தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயச்சந்திரன், மீரா, ரமணி, பிரனேஷ் ஆகியோர் அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் விக்னேஷ் தான் எடுத்து வைத்துள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டிள்ளார். இதுகுறித்து கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ்(41), மற்றும் அவரது உறவினர்கள் ஜெயச்சந்திரன்(50), மீரா ரமணி(45), பிரனேஷ்(37) ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி