அட்டுக்கல்: வீட்டு சுவர்களில் விரிசல் புனரமைத்து தர கோரிக்கை

67பார்த்தது
அட்டுக்கல்: வீட்டு சுவர்களில் விரிசல் புனரமைத்து தர கோரிக்கை
அட்டுக்கல் மலைக்கிராமத்தில், அரசு சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் சுவர்களில் விரிசல், மேற்கூரைகளின் பூச்சு உடைந்து விழும் வீடுகளை புனரமைக்க முடியாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில், தொண்டாமுத்துார் பேரூராட் சிக்கு உட்பட்ட, அட்டுக்கல் மலைக்கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, மலை மேல் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த மலைவாழ் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு சார்பில், அடிவாரத்தில், 45 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

சமீபத்தில், 15 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இங்கு, 3 முதல் 4 குடும்பங்கள் இடப்பற்றாக்குறையால், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், வீட்டின் உள்புற மேற் கூரையின் பூச்சு உடைந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. மழையின்போது வீட்டின் சுவர்கள் இடிந்து விழும் அபாயநிலை உள்ளது. இங்குள்ள மக்கள், தினசரி கூலி வேலைகளுக்கு சென்று வருவதால், இந்த வீடுகளை புனரமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, அரசு சார்பில், வீடுகளை புனரமைத்து தர வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி