சிறுமுகை: குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை!

52பார்த்தது
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், வச்சினம்பாளையம் போன்ற பகுதிகளில் காட்டு யானை கூட்டம் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது. நேற்று இரவு, வச்சினம்பாளையம் கிராமத்தில் ரங்கசாமி என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த ஒற்றைக்காட்டு யானை, அங்கு கால்நடைகளுக்காக வளர்க்கப்பட்ட புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. யானையின் சத்தம் கேட்டு விவசாயிகள் வந்து பார்த்தபோது, யானை குடியிருப்பின் அருகே வந்தது தெரிந்துள்ளது. குடியிருப்பின் அருகே கால்நடைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென யானை அருகாமையில் வந்ததால், கால்நடைகளைத் தாக்கி விடுமோ என ரங்கசாமியின் குடும்பத்தினர் மிகுந்த அச்சமடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் டார்ச் லைட்டுகள் அடித்தவாறு சத்தம் எழுப்பிய நிலையில், யானை குடியிருப்புப் பகுதிக்குள் வராமல் வெளியேறியது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி