வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழா

73பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈச்சனாரி ராஜகம்பள சமுதாய நல சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு இன்று காலை ஈச்சனாரி ராஜ கம்பள சமுதாய நல சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஈச்சனாரி ராஜ கம்பள சமுதாய நல சங்கம் தலைவர் மற்றும் அதிமுக குறிச்சி பகுதி அம்மா பேரவை செயலாளர் விக்னேஷ் குமார் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஈச்சனாரி ராஜ கம்பளம் சமுதாய நல சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி